கரூரில் ‘ஜனநாயகன்’ வெளியீடு: பட்டாசு வெடித்து நடனமாடி உற்சாகக் கொண்டாடிய ரசிகர்கள்: கேக் வழங்கி கொண்டாடிய மாவட்ட செயலாளர்.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் நடித்த

“ஜனநாயகன்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதையொட்டி,

தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் ஆறு திரையரங்குகளில் இன்று காலை 10.30 மணி முதல்
“ஜனநாயகன்” திரைப்படம் திரையிடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, கரூர் மாநகரில் உள்ள திண்ணப்பா, கலையரங்கம், அமுதா உள்ளிட்ட திரையரங்குகள் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள திரையரங்குகள் முன்பு விஜய் பாடலுக்கு நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கேக் வழங்கி உற்சாகமாகக் மை கொண்டாடினர்.
திரையரங்குகள் முன்பு பிரம்மாண்ட கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் அமைத்து, பட்டாசுகள்

வெடித்தும், தாரை–தப்பட்டை முழக்கத்துடன் நடனமாடியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜோசப் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தான் காரணமாக கடைசி படம் என்பதால் திரைப்பட வெளியீட்டை திருவிழாவைப் போல் கொண்டாடி வருகின்றனர்.
