Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

திருச்சி மருத்துவமனை ஐசியூவிலும் எலிகள் தொல்லை

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ வார்டில் எலி தொல்லை வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் இவரது படுக்கைக்கு வந்த எலி ஒன்று, தமிழ் கொடியின் கால் கட்டை விரலைக் கடித்துள்ளது. உடனடியாக மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியைப் பரிசோதித்துத் தேவையான தடுப்பூசியைச் செலுத்தினர்.

மேலும் எலி கடித்த மூதாட்டியை நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில்

வைரலாகி வருகிறது. இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை என பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மூதாட்டியை எலி கடித்த சாதாரண வார்டு முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!