தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவரான சேரன், மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு புகழஞ்சலி செலுத்தினார். SWAN-வின் தலைவராக தான் செலுத்தும் முதல் அஞ்சலி என உருக்கமாக குறிப்பிட்டுள்ள அவர், குருநாதர் பாக்யராஜின் வழியில் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார். ‘நம்ம கே.பாக்யராஜ் அணி’ என்ற பெயரிலேயே சேரன் அணி தேர்தலில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ் வழியில் பயணம்.. சேரன் புகழஞ்சலி!
