திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி மோகன் (64) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது செல்போனுக்கு கடந்த 4-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் உங்களுடைய ஓய்வூதிய அட்டையில் சிக்கல் இருப்பதாக கூறி அவரது வங்கி கணக்கு விவரங்களை கேட்டார். உடனே தனது வங்கி கணக்கு விபரங்களை அந்த நபருக்கு விஜயலட்சுமி அனுப்பி வைத்தார் பின்னர் நெட் பேங்கில் சிக்கல் ஏற்பட்டது. உடனே விஜயலட்சுமி ஸ்டேட் பேங்க் கிளைக்கு சென்று சிக்கல்களை சரி செய்தார் அதன் பின்னர் சில நாட்கள் கழித்து தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 5,28,535 பணம் எடுக்கப்பட்டு இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மோசடி நபர்கள் ஆன்லைன் மூலமாக அவரது வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று அந்த பணத்தை மோசடி செய்து விட்டனர் பின்னர் இது பற்றி விஜயலட்சுமி திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
