அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாடி இல்லாததால் நண்பர்கள் கிண்டல் செய்ததை தொடர்ந்து ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். தனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததாகவும், இதனால் வேலைவாய்ப்பிலும் பதவி உயர்விலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு தனது தோற்றம் மாறியதால் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
