Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 200-கிராம மக்களின் நலன் கருதி,

உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை புதிதாக பதவியேற்ற அரசு உடனடியாக துவங்க வேண்டும் என, கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில், கொள்ளிடம் ஆற்றின் நடுவே மற்றும் அரியலூர் மாவட்டம் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்..

இந்த பகுதிகளில் வசிக்கும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் தனியார் மற்றும் அரசு துறைகளில் பணி செய்பவர்கள் உட்பட தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு

அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. விவசாயிகளும் தாங்கள் விளைவித்த விளை பொருள்களை விற்பனைக்காக இந்த வழியாகத்தான் கொண்டு செல்கின்றனர்.

மேலும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரும் பட்சத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் கடக்க வேண்டிய பகுதியை, சுற்றி வந்து சுமார் 60-கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது..

ஆகையால் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களின் நலன் கருதி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என பல ஆண்டுகளாக கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதுவரையிலும் பல ஆண்டுகளாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்..

200-கிராம பொது மக்களின் நலன் கருதி புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என, தென்கரையோர கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!