கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியாக (தலைமை அர்ச்சகர்) கந்தரரு பிரம்மதத்தன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூத்த தந்திரியாக இருந்து வந்த கந்தரரு ராஜீவருக்குப் பதிலாக அவரது மகன் கந்தரரு பிரம்மதத்தன் இனி சபரிமலையின் தாந்திரீக சடங்குகளை முன்னின்று நடத்துவார்.
மூத்த தந்திரி எழுதிய கடிதத்தையும் சூழ்நிலையையும் பரிசீலித்த திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம், கந்தரரு பிரம்மதத்தனை புதிய தந்திரியாக நியமிக்கத் தனது முழு ஒப்புதலை அளித்தது. இதன்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் மலையாள சிங்கம் மாதத்தின் முதல் நாளில், முறைப்படியான தாந்திரீகச் சடங்குகளுடன் கந்தரரு பிரம்மதத்தன் சபரிமலை தந்திரியாகப் பொறுப்பேற்றுக் கொள்வார். இனி சபரிமலையின் முக்கியப் பூஜைகள் மற்றும் சடங்குகளை இவர் தலைமையேற்று நடத்துவார்.
