டேய் குட்டி நாயே வாடா… ஆட்டோவும் உயிரும் ஒண்ணாடா ?” – குட்டி நாயைக் தாக்கிய ஆட்டோ டிரைவர் : கோவையில் வெளுத்து வாங்கிய பெண் !!!
“உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது ?” – சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவும் பரபரப்பு வீடியோ !!!
கோவையில் குட்டி நாய் ஒன்றின் ஆட்டோவில் ஏற்றி அதன் சீட்டுகளை சேதப்படுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் அங்கு இருந்த குட்டி நாயை கொடூரமாக தாக்கி உள்ளார். அதனைக் கண்ட அங்கு இருந்த பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் கேள்வி கேட்டு நாரடித்த

வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெருத்த கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பச்சை இளம் குட்டி நாய் துடிதுடித்துச் அடித்து காயப்படுத்திய சம்பவத்தை கண்டு கடும் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்த ஆட்டோ ஓட்டுநரை மறித்து அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பிக் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அப்பெண், “டேய் குட்டி நாயே வாடா… சாகடிக்கிற! ஆட்டோ மயிறுல இருக்கு… நாயே ஏன்டா சாகடிச்சா? ஆட்டோவும் உயிரும் ஒண்ணா உனக்கு? உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது?” என ஆக்ரோஷமாகக் கத்தித் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த முழுச் சம்பவத்தையும் அங்கு இருந்தவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
வாயில்லா ஜீவன்கள் மீது மனிதர்கள் காட்டும் இதுபோன்ற கொடூரமான செயல்கள், நமது சமுதாயத்தின் மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கி உள்ளன.
