Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்- எம்பி கனிமொழி வாழ்த்து!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்-எம்பி கனிமொழி வாழ்த்து

ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கோவில்பட்டி வீரருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் சர்வதேச காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி, திறம்படச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ராஜா முத்துப்பாண்டிக்குத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில்: “ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

அவர் விளையாட்டுத் துறையில் மேன்மேலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மிகப்பெரிய உயரங்களை அடைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் ராஜா முத்துப்பாண்டிக்குச் சக விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!