கோவை மலுமிச்சம்பட்டியில் கோவில் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட பொதுசெயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பிரபு, கோட்ட செயலாளர் அசோக் , செயற்குழு உறுப்பினர் தனசேகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக கோவில்களில் தரிசன கட்டணம் செய்யும் படியான எந்த சட்டப்பிரிவும் இல்லை. 1987 இல் திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தரிசன வட்டனண முறை அமலுக்கு வந்தது என்றும் 1987-ல் கோயில் நீலங்கள் 5.25 லட்சம் ஏக்கர் என அறிவித்த தமிழக

அரசு 2019ல் கோவில் நிலங்கள் 4.78 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 1.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அறநிலையத்துறையின் கீழ் 22,000 கடைகளும் 33,627 மனைகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஆண்டு வருமானம் சுமார் 600 கோடி ரூபாய் முதல் 1000 கேக்ஷ ரூபாய் வருமானம் வர வேண்டும் என்றும் திருச்செந்தூர் கோயியின் உண்டியல் வருமானமே ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் எனில் தமிழகத்தில் உள்ள மொத்த கோவில்களின் உண்டியல் வருமானம் 1000 கோடிக்கும் மேல் வரலாம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வந்தும் பக்தர்களிடையே தரீசன கட்டனாம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? தற்போதும் கூட பக்தர்களாலும், ஊர் பெரியவர்களாலும் நடத்தப்படுகிற ஆயிரக் கணக்கான கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் இல்லாமல், ஏன்? உண்டியலே சடை இல்லாமல் மிகச்சிறப்பாக நடப்பது எப்படி? என கேள்வி எழுப்பபட்டது.
சபரிமலை போன்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கேரள கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கேரளாவில் முடியுமானால் தமிழகத்தில் தரீசன கட்டணத்தை ரத்து செய்ய முடியாதா.?
காசு கொடுத்துத் தான் கடவுளைக் காண வேண்டும் என்றால் அது கோவிலா? பொருட்காட்சியா? என்றும்
இரட்டை டம்ளர் முறை தவறு எனில், இரட்டை தரிசன முறையும் தவறு பொருளாதார தீண்டாமையை ஏற்படுத்தும் ஆலய தரிசன கட்டணமுறையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
