பாமகவின் நிழல் பட்ஜெட்டை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 27 சென்னையில் வெளியிட்டார். இதில் ஏழை தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் உணவு வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மா உணவகங்களில் ரூ.25-க்கு அசைவ உணவு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
