சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேயர் பிரியா, சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
