Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக… ரகுபதி பேட்டி

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்'தான் தவெக-ரகுபதி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது….

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்ட நடவடிக்கைகள் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார். உச்சநீதிமன்றத்தில் மேகதாது விவகாரத்தில் திமுக அரசு வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை ஆதவ் அர்ஜுனா எங்கள் மீது சுமத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் இது குறித்து என்ன கூறியுள்ளனர் என்பதை தகுந்த வழக்கறிஞரிடம் கேட்டு அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு அமைச்சர் பொய்யான தகவல்களை சொல்லக்கூடாது. மேகதாது அணையை கட்ட திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும் என கர்நாடக அரசு கேட்கிறது. திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்துக் கொள்ளலாம் ஆனால் தமிழ்நாடு அரசு திட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, மேகதாது அனையையே செயல்படுத்தக் கூடாது என திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய என்ற உத்தரவு தவறு என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

மேகதாது அணியையே கட்டக்கூடாது என்று நாங்கள் கூறும்பொழுது கர்நாடகா அரசின் திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசிடம் கேளுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறுவது தவறு என்று வாதிட்டு வருகிறோம். ஆனால் உச்ச நீதிமன்றம் மேகதாதுவிற்கான அடிப்படையே ஆரம்பிக்கவில்லை. எனவே இது Pre-mature stage என்று சொல்லித்தான் வழக்குக்கு தீர்ப்பை தந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவுக்கு இதெல்லாம் புரியாது புரிவதற்கான வாய்ப்பு கிடையாது.

ஆதவ் அர்ஜுனா லாட்டரியில் கவனம் செலுத்துபவர். அவர்களுக்கு அரசியல் புதிது. மேகதாது அணையை கட்டக்கூடாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த பொழுது அதில் திருத்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் தந்துள்ளார். மேகதாது அணையை கட்டுவதற்கு ஒரு துளி கூட திமுக அனுமதித்தது கிடையாது. சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக திமுக மீது மேகதாத விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டுகிறார்.

நீங்கள் கர்நாடக முதலமைச்சருடன் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரயோஜனம் கிடையாது. மேகதாது விவகாரத்தில் தீர்பாயம் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தவெக வலியுறுத்த வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தை தீர்பாயம் அமையுங்கள் என்று ஒன்றிய அரசை கேட்டு கடிதம் எழுதியதாகவோ நேரில் சந்தித்து கேட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை இது ஒரு சிதம்பர ரகசியமாகத்தான் இருக்கிறது.

முன்னுக்குப் பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக. மேகதாது விவகாரம் குறித்து நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டன எதிலும் தெளிவான தீர்வு கிடைத்தது கிடையாது. முதல்வர் பேச்சுவார்த்தைக்கு செல்வது ரீல்ஸ்’க்குத்தான் உதவும். மேகதாது விவகாரத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய தவெக அரசு இதுவரை அதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. டெல்டா விவசாயிகள் காய்ந்து கொண்டிருக்கிறான் அவர்களுக்காகத்தான் கேட்கிறோம். முதல்வர் கர்நாடக முதல்வருடனான பேச்சுவார்த்தை நீர்த்துப்போகும்.

மேகதாது கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் அரசாங்கத்திற்கு நாங்கள் சப்போர்ட் செய்கிறோம். நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. மேல ஏதாவது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு முரையான வாதத்தை முன்வைக்கவில்லை என்று ஆதவ் அர்ஜுனா கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய காவிரி நதிநீரை போராடி பெற வேண்டும்.

error: Content is protected !!