Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

ரியல் எஸ்டேட் நிறுவன அத்துமீறலை தட்டி கேட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது பொய் வழக்கு : வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு

பொதுப்பாதை ஆக்கிரமிப்பைத் தட்டிக்கேட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததோடு வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 50,000 லஞ்சம் கேட்ட மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செங்கேணி கண்ணீர் மல்கப் புகார் மனு அளித்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மணம்மை ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிலத்திற்குச் செல்லும் வழியில் உள்ள இடத்தை ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கி மனைகளாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் விவசாய நிலத்திற்குச் செல்ல பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தானமாக வழங்கப்பட்ட பொதுப் பாதையையும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு பலமுறை வலியுறுத்தியும் நிறுவனம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மணம்மை திமுக ஊராட்சி மன்றத் தலைவரான செங்கேணி நேரடியாகச் சென்று ரியல் எஸ்டேட் நிறுவனத் தரப்பிடம் நியாயம் கேட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் செங்கேணி மீது மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அவதூறு புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, மாமல்லபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரசுராமன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் செங்கேணியிடம் 50,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் லஞ்சப் பணத்தைக் கொடுக்கச் செங்கேணி மறுத்ததால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளார்

காவல்துறையின் இந்த அநீதியான நடவடிக்கையால் மனவேதனையடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் செங்கேணி செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புகார் மனு அளித்தார்.
அதில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அத்துமீறலைத் தட்டிக்கேட்ட என் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததோடு லஞ்சம் கேட்டு மிரட்டிய உதவி ஆய்வாளர் பரசுராமன் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமர மக்களின் பாதையைக் மீட்கப் போராடும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கே இந்தக் கதி என்றால் சாதாரண எளிய மக்களின் நிலை என்ன? மக்களின் சேவகர்கள் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு, 50,000 லஞ்சத்திற்காகப் பொய் வழக்குகளை வாரி வீசும் இது போன்ற கருப்பு ஆடுகளால் காவல் துறையின் மானமே கப்பலேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!