ஜப்பானின் தென்மேற்குப் பிராந்தியமான கியூஷு பகுதியில் திடீரெனப் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ள இந்த அதிர்வால் அப்பகுதி மக்கள் கடும் பீதிய அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூஷு பிராந்தியத்தைச் சுற்றியுள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, சாகா, மியாசாகி, ஃபுக்குவோக்கா மற்றும் ஒயிட்டா ஆகிய 7 முக்கியப் பகுதிகளுக்கு நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் நாடு, புவித் தட்டுகளின் நகர்வால் அடிக்கடி நிலநடுக்கங்களையும் சுனாமியையும் சந்தித்து வரும் அமைப்பைக் கொண்டது. இருப்பினும், ரிக்டர் அளவுகோலில் 7.0-க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நிலநடுக்க எச்சரிக்கை அமைப்புகள் உடனடியாக முடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானின் கியூஷு பிராந்தியத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவாகின. இதனால் வீடுகள், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கடுமையாகக் குலுங்கின. நிலநடுக்கப் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ள முக்கிய மாகாணங்களான குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, சாகா, மியாசாகி, ஃபுக்குவோக்கா மற்றும் ஒயிட்டா ஆகிய பகுதிகளுக்குப் நிலநடுக்க எச்சரிக்கை உடனடியாக விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான கட்டடங்களுக்குள்ளும், திறந்தவெளிகளிலும் தஞ்சம் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
