உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள மனிதவள பற்றாக்குறையை ஈடுகட்ட, கூடுதலாக 30,000 வடகொரிய வீரர்களை ரஷியாவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷியாவின் வொரோனேஷ் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு, வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் வழங்கப்படுவதாக உளவுத்துறை தெரிவிக்கிறது. வடகொரியாவின் இந்நடவடிக்கை தென்கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
