Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

எத்தனை துறைகளை கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கூடுதல் துறைகளை கவனிப்பதாக கூறி ஒன்றுக்கு மேற்பட்ட அரசு கார்களை பயன்படுத்துகின்றனர் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி, தகுதியுள்ள அதிகாரிகள் மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பில் கூடுதல் பொறுப்புகளை வகித்தாலும் கூட, அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசு வாகனங்கள் ஒதுக்கப்பட முடியாது என்பதை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசு வாகனங்கள் அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அலுவல் பணி அல்லது சுற்றுப்பயணங்களின் போது தவிர, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் தனிப்பட்ட பயன்பாட்டுகளுக்கு பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது .

error: Content is protected !!