சிவகங்கை அருகே மாத்தூரில் பிரபல ரவுடி ஊர்க்காவலனை அவரது வீட்டில் வைத்தே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கொலை செய்த குற்றவாளிகள் குறித்து போலீசார் துப்பு துலங்கி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த 3-வது கொலையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
