Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி..திருச்சியில் பரிதாபம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி

திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி ( 75). இவர் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அருகாமையில் வசிக்கும் அவரது மகன் ராஜு தந்தையைக் கவனித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு மகனின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுக் குடிசை வீட்டுக்கு திரும்பினார்.
பின்னர்ப் பீடி பற்ற வைத்துப் புகை பிடித்துக் கொண்டு அசதியில் தூங்கி விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தீப்பொறி காற்றில் பறந்து குடிசை வீட்டில் தீ பற்றியது. பின்னர் அந்தத் தீ வேகமாக அவரது படுக்கையிலும் பரவியது இதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த செங்காளி பலத்த தீக்காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டுத் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கே டாக்டர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் செங்காளி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துக் கேகே நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதியவர் திடீர் தற்கொலை

மண்ணச்சநல்லூர் கிழியநல்லூர் ஹரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 64)
இவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பழனிவேல் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பழனிவேல் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர் இதுகுறித்து அவரது மகன் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!