Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

சண்டையை வேடிக்கை பார்த்த வாலிபர் மீது கல் கல்வீச்சு- மண்டை உடைந்தது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் இவரது மகன் சுசி விக்னேஸ்வரன் (27). இவர் வீட்டின் முன்பு தனது தந்தையிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகாமையில் வசிக்கும் தமிழரசு (65) என்ற முதியவர் தந்தை மகன் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சுசி நாங்கள் சண்டை போடுவதை நீ எதற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் எனக் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்த சுசி அங்குக் கிடந்த சங்கிலில் எடுத்து முதியவரின் தலையில் ஓங்கி அடித்தார் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது . பின்னர் அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரைத் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 7 தையல் போடப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்துத் தமிழரசு கொடுத்த புகாரின் அடிப்படையில் சுசி விக்னேஸ்வரனை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு2 வாலிபர்கள் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை நச்சலூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 41 ) இவர் திருச்சி உறையூர் அண்ணாமலை நகர் குறிஞ்சி ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்றார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் இது குறித்துப் பாலமுருகன் உறையூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் செல்போனை பறித்துச் சென்ற உறையூர் ராமலிங்க நகர் அகிலா பால் கார்டன் பகுதியைச் சேர்ந்த சித்தார்த் (19) ராமலிங்க நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (19) ஆகிய இரண்டு வாலிபர்களைக் கைது செய்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாரத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்

மனைவி பிரிந்து சென்றதால் வங்கி ஊழியர் தற்கொலை

திருச்சி உறையூர் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 34) தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாகப் பணியாற்றி வந்தார் இவருக்குத் திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார் பின்னர்க் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் பின்னர்த் தனியாக வசித்து வந்த ஆறுமுகம் மனதளவில் பாதிக்கப்பட்டார் இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார் அவரது தம்பி இசக்கி முத்து அவரை மீட்டுத் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து இசக்கிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

திருச்சி வயலூர் ரோடு ஸ்ரீநிவாசா நகர் எல்லை கோவில் எதிர்புறம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி விழுந்தார் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்குக் கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எனத் தெரியவில்லை இது குறித்துப் புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாட்டரி சீட்டு , புகையிலை விற்ற 4 பேர் கைது

ஸ்ரீரங்கம், ராகவேந்திரபுரம் ஆர்ச் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற லால்குடி தாளக்குடி எஸ் எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் ரூபாய் 2100 பணம், நோக்கியா செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டது இதேபோன்று பாலக்கரை துரைசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே லாட்டரி சீட்டு பெற்ற உறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்தீக் (28) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்தும் லாட்டரி சீட்டுகள் ,ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது மேலும் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறையூர் அரச மரத்தடி டாக்கர் ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற திருச்சி மருதாண்ட குறிச்சி குழுமணி ரோடு லிங்கம் நகர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (46) உறையூர் மேட்டு தெரு ரேஷன் கடை அருகே லாட்டரி சீட்டு விற்ற உறையூர் சாலை ரோடு அச்சுக்கட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த ரசூல் முகமது ( 45 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் மேலும் ஸ்ரீரங்கம் மேல கொண்டையம்பட்டி பிள்ளையார் கோவில் தெற்கு தெருப் பகுதியில் பணம் வைத்த சூதாடிய பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அருண் ( 41 ) விக்னேஷ் (35 )செல்வராஜ் (40) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள் கைப்பற்றப்பட்டது மேலும் கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் திருச்சி ஜெயில் ரயில்வே ஜங்ஷன் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாகத் திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த முகில் ( 21 ) என்பவரை கைது செய்தனர்.

போதை மாத்திரைகள் விற்ற 2 ரவுடிகள் கைது..

திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பதாகப் பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனே சிறப்புச் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை முதலியார் சத்திரம் ஆழம் தெரு பகுதியைச் சேர்ந்த அல்லாஹ் பிச்சை ( 41 ) என்பவரை கைது செய்தனர் இவர் சந்தேகப்படும் ரவுடி பட்டியலில் உள்ளார்.
இவரிடமிருந்து 27 போதை மாத்திரைகள் 2 ஊசி ரூபாய் 710 ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதேபோன்று தில்லை நகர் ரெட்டை வாய்க்கால் பகுதியில்
புகையிலைப் பொருட்கள் விற்ற தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சோனி என்கிற பிரசாந்த் (வயது 21) என்பவரை தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் கைது செய்தார் அந்த நபரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் மோட்டார் சைக்கிள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!