மருத்துவ காப்பீட்டு சந்தாவை தன்னிச்சையாக ரூ. 497 லிருந்து ரூ 644 ஆக உயர்த்தியதை கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம் கோராமல் கட்டாய பிடித்தம் செய்யும் அநீதியை கண்டித்தும்,மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகள் அனைத்தையும் கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம் பெற்று அரசு பணியாளர்களுக்கு உள்ளது போல் சந்தாவை ரூ 390 என நிர்ணயம் செய்ய வேண்டும்,ஓய்வூதிய சங்கங்களை அழைத்து பேசி,விவாதித்து திருத்திய அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார்.துணைத் தலைவர் தண்டபாணி,இணைச்செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் பொன் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் நாகராஜன்,மாவட்டத் தலைவர் மணிவண்ணன்,மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம்,மூத்த வழக்கறிஞர் ஏ. ஜ. டி. யு.சி.தொழிற்சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
முடிவில் பொருளாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.
