தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜூலை.30) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
