குஜராத்தில், கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக 2 ஆண்டுகள் நாடகமாடி, காதலனுடன் சேர்ந்து அவரைக் கொன்று புதைத்த மனைவி கைதானார். கணவரின் ஆஸ்திரேலியா முகவரியை முன்னுக்குப்பின் முரணாக மனைவி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸ் நடத்திய விசாரணையில், மனைவி பிரித்வி காதலன் நிலேஷுடன் சேர்ந்து மதுவில் விஷம் கொடுத்துக் கொன்று தொழிற்சாலை ஒன்றில் 12 அடி பள்ளம் தோண்டி புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
