சென்னை புறநகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்,காலை நேரங்களில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆகிய ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கி தவித்த பின்னரே பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பெருங்களத்தூரிலிருந்து தாம்பர நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த கனரக லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது சாலையின் நடுவே கனரக லாரி நின்றதால் வண்டலூரில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய ஜி.எஸ்.டி சாலையான இரும்புலியூரில் இருந்து பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பணிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் என கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
