Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முதல்முறை தவறு செய்வோர் 1 மாத தற்காலிக பணிநீக்கம், 2ஆம் முறை தவறு செய்வோர் 3 மாத தற்காலிக பணிநீக்கம், 3ஆம் முறை தவறு செய்தால், உடனடியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு குற்றக் குறிப்பாணை வழங்கப்படும். பாட்டிலுக்கு 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் கூடுதலாக விற்றால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதில் 60 விழுக்காட்டை விற்பனை செய்த பணியாளரும், 40 விழுக்காட்டை மேற்பார்வையாளரும் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!