சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து 6 சவரன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். அண்ணாநகரை சேர்ந்த நந்தகோபாலிடம் நகையை பறித்த மடிப்பாக்கத்தில் தங்கி ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த சையத் முஷ்ரப்பை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
