உத்தராகாண்டின் டேராடூனில், திருமணமான 8 மாதங்களுக்குப் பிறகு, தனது கணவர் வீட்டார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்ட இளம் ஆசிரியை ஸ்ருஷ்டி கந்தாரி தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கணவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, ஜோதிடர் ஒருவர் உங்கள் மருமகள் வந்த நேரம் உங்களுக்கு கஷ்டகாலம் தொடங்கியதாக கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர் மனரீதியாக துன்புறுத்தி வந்ததாக தற்கொலைக்கு முன் வீடியோவில் கண்ணீர்மல்க பேசியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
