சென்னை சவுகார்பேட்டையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து, ராஜஸ்தானைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஜூலை.30) இரவு சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்த நிலையில், போலீசார் தலையிட்டு அவர்களை மீட்டனர். சோதனை என்ற பெயரில் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
