அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.95 லட்சம்) கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டணம், வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெயினிங் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
