திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள முட்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த 125 கிலோ செம்மரக்கட்டைகளைப் புழல் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். அரசு அலுவலகம் அருகிலேயே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளைக் கடத்தி வந்து பதுக்கி வைத்த மர்ம நபர்கள் குறித்துக் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
