Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.. இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

கரூரில், மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காவேரி நதி தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் தேவைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது.

மேலும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவேரி நீரின் வரத்து பாதிக்கப்படும் என்பதால், அந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது.

காவேரி நீர் உரிமையை பாதுகாக்க வேண்டும், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டங்களை கூட்ட வேண்டும், தமிழக அரசு காவேரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!