தமிழகத்தில் அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரையிலான பருத்தி ஆண்டு நிறைவடைய 15 நாட்கள் உள்ள நிலையில், இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது. தினசரி பஞ்சு வரத்து 2,200 பேல்களில் இருந்து 10,000 பேல்களாக உயர்ந்துள்ளது. இதனால் பஞ்சு விலை சற்று குறைந்துள்ளது. பஞ்சு விலை உயர்வால் கடந்த 1ஆம் தேதி ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்திருந்தது. தற்போது பஞ்சு விலை குறையத் தொடங்கியுள்ளதால், நூல் விலை கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்படுவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
