தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலநிலை மாற்றத்தால் கொசுக்கள் பெருகி, தினசரி 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த திங்கள்கிழமை 79 பேர் பாதிக்கப்பட்டனர். டெங்கு தடுப்புக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
