Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது... திருச்சி க்ரைம்

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி இபி ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30) இவர் கடந்த 31ந்தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டூர் சக்தி நகரை சேர்ந்த ரவுடி மாஞ்சா வேலு என்கிற ராஜதுரை (26) அவரை வழிமறைத்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 1000 பணத்தை பறித்து சென்றார். இது குறித்து சீனிவாசன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆட்டோ மோதி மனைவி சாவுகணவன் காயம்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் கோனார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 68) இவரது மனைவி சாந்தி (வயது 63)இவர்கள் இருவரும் நேற்று திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திற்கு எதிரே இருவரும் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சாந்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் கண்ணனுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி கருமண்டபம் கோரையாறு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த பிராட்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல திருச்சி மன்னார்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் (24) என்பவரை கே.கே. நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 180 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!