Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடுரோட்டில் செல்பி எடுத்து போதை ஆசாமி அலப்பறை.. அரியலூரில் பரபரப்பு

நடுரோட்டில் செல்பி எடுத்து போதை ஆசாமி அலப்பறை.. அரியலூரில் பரபரப்பு

அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழப்பழுவூர் அருகே நட்ட நடு சாலையில் போதையில் படுத்து புரண்டு செல்பி எடுத்த குடிமகனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைகள் அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் பள்ளி வாகனங்கள் பேருந்துகள் பொதுமக்கள் என சாலையில் வாகனங்கள்

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அச்சாலையில் நடுவில் படுத்துக்கொண்டு குடிமகன் ஒருவர், அலைபேசியில் பாடல் கேட்டுக் கொண்டும், புரண்டு புரண்டு படுத்து செல்ஃபி எடுத்தவாறும் இருந்த காட்சியை சாலையில் பயணித்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இவரது போதையின் அட்றாசிட்டியை கண்டு அச்சாலைகள் சென்ற பள்ளி-கல்லூரி செல்லும் வாகனங்களும், பேருந்துகளும் இவருக்கு வழி விட்டு ஓரமாக சென்றன. எதிர்சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் கார் வாகனங்களும் இதைக்

கண்டு ஒதுங்கி தங்களது வாகனத்தை ஓட்டி சென்றனர். அதே நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருக்க கூடிய வாகனங்கள் குறித்து சிறிதும் கவலையின்றி, மது போதையில் குடிமகன் செய்த அட்ராசிட்டி இணையத்தில் வைரல் ஆகி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. போதையில்லா தமிழகத்தை நோக்கி மாநில முழுவதும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், மது கடைகளை மூடி வரும் நிலையில், இது போன்ற குடிமகன்களின் அட்ரா சிட்டி மாற்றம் கொண்டுவதற்கு நீண்ட காலமாகும் என்பதையே நினைவூட்டுகிறது.

error: Content is protected !!