மகாராஷ்டிராவில் அஞ்சனி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபர் ஒருவர், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்தார். ஆற்றில் நீர்வரத்து அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அவரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் படையினர் பாதுகாப்பாக அவரை கரைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தின் மீது அமர்ந்து உதவிக்காக காத்திருக்கும் நபரின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
