காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு, தாமதமானது என்றாலும் சரியான நடவடிக்கை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசும் கர்நாடக அரசும் இணைந்து செய்யும் கூட்டு சதியை முறியடிக்கும் வகையில், உரிய தரவுகளுடன் வழக்கை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டப் போராட்டம் மூலமே தமிழக உரிமைகளை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
