இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம்
திருச்சியில்
சிறையில் அடைப்பு
திருச்சி ஆக 2 -திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர் எடமலைப்பட்டி புது போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் போலீசார் இருசக்கர வாகனம் திருட்டு போன இடத்தில் சிசிடி கேமராவை வைத்து சோதனை செய்தனர். அப்பொழுது அந்த இடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தை ஒரு வாலிபர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
விசாரணை நடத்திய போது இருசக்கர வாகனத்தை திருடியது திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 18) என்பது தெரியவந்தது. இவர் திருச்சி சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் தீபக்கை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று திருச்சி கே கே நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு திருட்டு வண்டியை ஒட்டி வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்தனர்.
