ஆட்சியைக் கவிழ்க்க த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐ விசாரணை கோரிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கைது செய்யப்பட்டிருந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதன் மூலம் இவ்வழக்கில் இதுவரை 11 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
