சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர் உள்ளிட்ட 430 பேர் மீது வழக்கு பதிவு.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் என பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம், உருவ பொம்மை எரிப்பு, தவெக ஃப்ளெக்ஸ் பேனர் எரிப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையம், தெற்கு காவல்நிலையம், மேற்கு காவல்நிலையம் என பல்வேறு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் மேயர் ராமநாதன் உள்ளிட்ட 430 திமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
