உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரேசன் கடைகளில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.163 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய மாநில வீட்டு வசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்திற்கான அரசு மானியம் ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே 70,00 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 12,646 கோடி ஒதுக்கீடு. நெய்தல் மீட்சி இயக்கத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மகளிருக்காக சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம் தொடங்கப்படும். இதில் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ. 38,000 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.
தமிழகத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானநிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார் சத்திரம் மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.
புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு….
