சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு இன்று காலை வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவித் தனது மரியாதையைச் செலுத்தினார். தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அஞ்சலி நிகழ்விலும் அவர் பங்கேற்றார். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் திரளானத் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
