சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். மேகதாது அணை கட்ட எந்த அனுமதியும் தரக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி பிரச்சனை உணர்வு ரீதியான பிரச்சனை, உயிர் ஆதாரம். மேகதாது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். தமிழ்நாட்டின் உரிமையை அரசு எப்போதும் விட்டுக் கொடுக்காது. காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு பயண திட்டம் என்று கூறினார்.
