சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட வாலிபர் உயிரிழப்பு.
பழைய வண்ணாரப்பேட்டை மாடன் லைன் ஹவுசிங் ஃபோர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ஆகாஷ்(24)
இவருக்கு குடிப்பழக்கம் கஞ்சா பழக்கம் மட்டுமின்றி போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் செலுத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா(24) என்ற மனைவி 3 வயதில் மகன் உள்ளனர்.இந்நிலையில் அடிகடி போதை மாத்திரை பயன்படுத்துவதால் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது அதன் காரணமாக சங்கீதா பழைய வண்ணாரப்பேட்டை தந்தான் குளம் தெருவில் வசித்து வருகிறார், ஆகாஷ்

அவருடைய தாய் 3 வயது மகனுடன் வசித்து வந்தார் நேற்று திடீரென ஆகாஷ் மயங்கி இருப்பதாக சங்கீதாவிற்க்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் வீட்டிற்கு சென்று ஆகாஷ் ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினார் அதன் பெயரில் வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் ஆகாஷுக்கு போதை பழக்கம் இருந்ததால் போதை மாத்திரையை தூளாக்கி தண்ணீரில் கலந்து அதை ஊசி மூலம் தனக்குத்தானே செலுத்தி கொண்டு உள்ளார் அதன் காரணமாக அவர் உயிர் இழந்தார் என கூறினார். மேலும் இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் ஆகாஷ் தனியாக ஊசியை செலுத்திக் கொண்டானோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து இதுபோல் செயலில் ஈடுபட்டானா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள், இச்சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
