தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,600 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோ ரூ. 2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
