Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை தலைமைச் செயலகம் முன்பு… கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

சென்னை தலைமைச் செயலகம் முன்பு... கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின்நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 700 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலில், கடந்த 36 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் வசம் ஒப்படைக்க வேண்டும்
திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்குச் சொந்தமான வணிக வளாகங்களில் நிலுவையில் உள்ள சுமார் ரூ1.5 கோடி வாடகை பாக்கியை உடனடியாக வசூலிக்க வேண்டும் மேலும், வாடகையை வசூலிக்கத் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து, சென்னையில் விரைவில் தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!