உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவாக இருந்த உமா சங்கர் சிங் (55) உடல்நலக் குறைவால் கடந்த 5ஆம் தேதி காலமானார். இவர், 2012 முதல் எம்எல்ஏவாக இருந்து வந்தார். கடந்த 2022 சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு 6,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நீண்டகாலமாக புற்றுநோயால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏ காலமானார்…
