:
திருவரங்கம் அடிமனை பிரச்சனையில் சட்ட வல்லுனருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்
திருவரங்கத்தில் அமைச்சர் ரமேஷ் பேட்டி..
திருவரங்கம் அரங்கநாத
சுவாமி திருக்கோயிலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழிப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, கடந்த கால ஆட்சியில் பொய்வாக நடந்து வந்த பணிகள் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு துரிதமாக நடைபெற்று வருகிறது
திருவரங்கம் கோவிலில் 21 கோபுரங்களில் ஒன்றான ஸ்ரீ தாமோதர கிருஷ்ண கோபுரம் பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்வேறு சூழலில் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டு தற்போது நம்முடைய ஆட்சியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது
திருக்கோவில் நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அல்லது அந்த அறக்கட்டளை நிர்வகிக்கக்கூடிய நபர்களுடைய பெயர்களில் இருக்கக்கூடிய இடங்கள், கோவில்களுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக அந்த நிலங்கள் முன்னோர்களால் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த காரணங்களை மறைத்து சில நீதிமன்ற வழக்குகள் மூலமாக நிர்வாக ரீதியான சில விஷயங்கள் மூலமாக அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் பத்திரப்பதிவுகள் நடக்கிறது
அறநிலைத்துறை கவனத்திற்கு வந்த உடனே சட்டரீதியாக மற்றும் காவல் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒரு காலத்திலும் இதுபோன்று கோவில் சொத்துகளாக இருந்தாலும் கோவிலுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சத்துக்களாக இருந்தாலும் அது காப்பாற்றப்படும், இந்து சமய அறநிலையத்துறை கைவிடாது
பழனியில் நடைபெற்ற சம்பவம் போன்று தான் நீதிமன்றம் சென்று நிராகரிப்பு சீட்டு வாங்கி வந்து இது போன்ற விஷயங்கள் நடக்கிறது, நீதிபதியும் நீதிமன்றத்தின் ஏமாற்றி ஆர்டர் பெற்று இருக்கிறார்கள் என்பதனை நீதிபதியே குறிப்பிட்டுள்ளார், பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அந்த பழனி நிலத்தை மீட்டுள்ளோம். அதுபோல கவனத்திற்கு வந்தவுடன் அதனை மீட்க வேண்டும் மீட்காமல் இருப்பது தான் தவறு கடந்த ஆட்சி காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தனிநபர்களுக்கு அதிகாரம் மாற்றம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்வதற்கான முயற்சி நடந்தது தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் கவனத்திற்கு வந்த பிறகு பத்து நாட்களுக்கு முன்பாக கோவில் நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் என 19 பேர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நம்முடைய ஆட்சியில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஐந்து வருட ஆட்சியில் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டு இருந்தார்கள், தூங்கிக்கிட்டு இருந்தார்களா கோவிலை காப்பாத்துகிறோம், கோவிலை மீட்டெடுக்கிறோம். நாங்க தான் கோவிலை காக்க வந்தவர்கள். கோயில் நிலங்களை மீட்க வந்தவர்கள் என பேசினவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் ஏன் மீனாட்சி அம்மன் கோவில் வழக்கில் என்ன பண்ணிட்டு இருந்தாங்க. தூங்கிட்டு இருந்தாங்களா? ஏன் கைது செய்ய வில்லை. தற்போது கோவில் சொத்துகளை மீட்பதிலும் அறக்கட்டளை சொத்துக்கள் எந்த காரணத்திற்காக கொடுக்கப்பட்டதோ அந்த காரணத்தை நிறைவேற்றுவதிலும் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் திருக்கோவில் பணிகள் மற்றும், திருக்கோவில்களுக்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் குளங்கள் சீரமைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.
திருவரங்கம் அடிமனையில் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருவதுடன் சட்ட வல்லுனர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு எந்தவிதமான முன்னெடுப்புகள் எடுக்க முடியுமோ நிச்சயமாக எடுக்கப்படும்
திருக்கோவில்களில் மொபைல் போன்கள் அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது, சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வருவதை பார்க்கிறோம் கடந்தகால ஆட்சியில் அதனை செயல்படுத்தவில்லை, இதனால் கோவில்கள் உள்ள கருவறை வீடியோகூட வெளிவருகிறது, முதல் நிலை திருக்கோவில்களில் செப்டம்பர் 1ந்தேதி முதல் அனைத்து மொபைல் கவுண்டர்கள் வைத்து பாதுகாப்பான முறையில் மொபைல்களை பாதுகாக்க கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, முதற்கட்டமாக அனைத்து முதல் நிலை கோவில்களிலும் செல்போன் கொண்டு செல்வதற்கு தடைகள் அமலில் வரும்
கோவிலுக்கு மனநிறைவுக்காக சாமி கும்பிட செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது தேவையற்ற ஒன்று, மொபைல் போன்களை பயன்படுத்துவது,போட்டோ எடுப்பது வீடியோ எடுப்பது தேவையற்ற ஒன்று, இறைவனை தரிசிக்க செல்லும் போது எண்ணங்கள் இறைவன் மேல் இருக்க வேண்டும், என்ன பிரார்த்தனைக்கு வந்தோமோ அதன் மேல் கவனம் இருந்தால் சிறப்பாக இருக்கும்
அதேநேரம் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் வரும்போது கோவிலுக்கு வெளியே பேட்டி மற்றும் வீடியோ எடுத்துக் கொள்ளலாம். கோவிலுக்குள் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதை வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
லஞ்ச புகார்கள் வந்தால் அதன் மீதான நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகிறோம், மின்னஞ்சல் அறிவிக்கப்பட்டு அதில் வரக்கூடிய புகார்களை சட்டரீதியாக வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, நிச்சயம் தொடர்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
