சென்னை விமான நிலையப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் மீனம்பாக்கத்தில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்துத் தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்டதை தொடர்ந்து, அமித் ஷா அங்கிருந்து சாலை மார்க்கமாகச் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார்.
சென்னையில் கனமழை.. சாலை மார்க்கமாக ஏர் போர்ட் வந்த அமித்ஷா
