ஈரோடு மாவட்டம், தாளவாடி ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசவசெட்டி (62), இன்று அதிகாலை 2 மணியளவில் தனது தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட முயன்றபோது, யானை அவரைத் தாக்கி காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மஞ்சள், உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் பயிரிட்டிருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
